நாட்டுப்புறவியலும் மானிடவியலும் கள ஆய்வு சார்ந்த e (Field oriented subject). சென்னைறி நாட்டுப்புறவியல் பாக்க, கொண்டாங்களஙறைகளும், ஆய்வின்றி நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வே செய்ய முடியாது என்கிறார் கென்னத் கோல்ட்ஸ்டெயின் (Kenneth Goldstein) அவர்கள். ஏனென்றால் நாட்டுப்புறப்பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழி, விடுகதை, நாட்டுப் புறக்கலை, நாட்டுப்புறத் தெய்வங்கள், நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் அனைத்தும் நாட்டுப்புற மக்களிடையே தலைமுறை தலைமுறை யாக வாழையடி வாழையாக நிலவி வருகின்றன. அவைகள் பல்லாண்டுக் காலமாக வாய்மொழியாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றைச் சேகரித்தால்தான். இத்துறையில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கள ஆய்வு இன்றி இத்துறையே இல்லை என்று கூறிவிடலாம். கள ஆய்வுதான் இத்துறைக்கு உயிர்நாடி என்றும் கூறலாம். மக்களது நம்பிக்கைகள் பாடல், கதை, கலை, ஆடல், பாடல் முதலியவற்றை விளக்குவதே நாட்டுப்புறவியல் என்றும் அஃது அனைத்து மக்களின் கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பெற்று தலைமுறை தலைமுறையாக வழங்கப்பெற்று, பயிற்சி பெற்ற ஆய்வாளர்களின் முயற்சியால் எழுத்துருவாக்கம் பெறுகின்றது என்ற கொட்டுத் கூரத் (Gertrude P. Kurath) தின் கூற்றும் இங்குக் குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புறவியல் வழக்காறு களைச் சேகரிப்பதே முதல் பணியாகும். எந்த அறிவியல் ஆய்விலும் சேகரித்தலும் (collection) 2minegg (classification) शुक्र (Analysis) Eg மூன்று முறைகளாகும். நாட்டுப்புறவியல் துறைக்கும் இம்மூன்று முறைகளும் பொருந்தும். இம்மூன்று முறைகளும் தன்னிச்சை யானவைகள் என்றாலும் ஒன்றையொன்று சார்ந்த வைகளாகும். கள ஆய்வில் சேகரிப்புப் பணியைச் (collection) செய்கிறோம்.
ஆய்வுச் சிக்கலை எடுத்துரைத்தல் (Problem statement and analysis)
சேகரிக்கும் முன்பு எவ்வகை ஆய்வு சிக்கலைத் தீர்க்கப் பயன்படும் என அறுதியிட்டுக் கொள்ளவேண்டும். எந்தவொரு ஆய்வின் அடிப்படை நோக்கமும் சில இன்றியமையாத வினாக் களுக்கு விடை காண்பதாக அமையவேண்டும் என்கிறார் நாட்டுப்புறவியல் பேரறிஞர் ஜான் ஹெரால்டு பிரண்வாண்ட் (Jan Harold Brunvand)
i) வரையறை செய்தல்
ii) வகைப்படுத்துதல்
iii) மூலம்
iv) தோற்றம்
v) பரவுதல்
vi) மாற்றம்
vii) அமைப்பு
viii) செயல்-பயன்
ix) பொருளும் நோக்கமும்
x)பயனும் பயன்படுத்துதலும்
கருதுகோளை (Hypothesis) அடிப்படையாக எவத்து ஆய்வு செய்யவேண்டும். ஆய்வுச்சிக்கலே கருதுகோள் வடிவில் அமை கருதுகோள் தெளிவாக அமையவேண்டும். தரவு கட்கு நெருங்கிய தொடர்புடையதாகக் கருதுகோள் இருக்க வேண்டும். கருதுகோளை உருவாக்கிய பின்பு, எந்தச் செய்திகள் ஆராயின் ஆய்வுச்சிக்கலுக்கு முடிவு கிடைக்கும் என்பதே ஆய்வுச்சிக்கலைப் பகுத்தாராய்வதன் நோக்கமாகும். சான்றாக, வில்லுப்பாட்டை ஆராய விரும்பினால், திருநெல்வேலி மாவட்டத்தைக் களமாகக் கொள்ளவேண்டும். ஆய்வுச்சிக்கலைத் தீர்க்கத் தேவையான செய்திகளையும் விளக்கக் குறிப்புக்களையும் தேவையான செய்தி களையும் விளக்கக்குறிப்புக்களையும் வரையறுக்க வேண்டும் கள ஆய்வு செய்ய வேண்டிய கால அளவு (time) பற்றி முன்னரே திட்டமிடல்வேண்டும். ஆய்வுச் சிக்கலை நன்கு உணர்ந்து, அதற் கேற்றவாறு கருதுகோளை உருவாக்கி, தரவுகளைச் சேகரித்துப் பகுத்து ஆராயவேண்டும்.
கென்னத் கோல்டுஸ்டெயின் அவர்கள் சேகரிப்புத் திட்டங் களைப் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்.
1. களஆய்வுத் திட்டங்கள் (Survey Project)
எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளப்படாத பகுதிகளில் இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளலாம். ஆங்கிலத்தில் இதனை (Survey Project) என்பர். காலமும் நிதியும் இவ்வாய்வுத் திட்டத்தில் கவனிக்கவேண்டிய தொன்றாகும்.
2. ஆழ்ந்த ஆய்வுத்திட்டங்கள் (Depth Project)
ஓரினத்தாரிடமிருந்தோ அல்லது வட்டாரக் குழுவிட மிருந்தோ நிலவும் அனைத்து வழக்காறுகளையும் தொகுக்கும் முயற்சியாகும். பலர் குழுவாகச் சேர்ந்து செய்யும் நீண்டகால ஆய்வாக இருப்பினும் பயனுடைய ஆய்வுத் திட்டங்களாகும்.
3. உள்ளூர்த் திட்டங்கள் (Local Projects)
களப்பணி ஆய்வாளன் ஒரு குடும்பம், உறவினர், அல்லது ஊரில் வழங்கும்
வழக்காறுகளைச் சேகரிப்பதை இதன்கண் அடக்கலாம். கட்டபொம்மன் வரலாற்றைக் கட்டபொம்மன் வம்சாவழியினரிடமிருந்து சேகரிக்கலாம்.
வினாநிரல் (Questionnaire) நான்கு பகுதிகளைக் கொண்ட தாக இருக்கும்.
i) நோக்கம்
ii) நெறிமுறைக் கட்டளைகள்
iii) தகவலாளி பற்றிய விவரம்
iv) வினானிரலின் உட்பகுதி
களப்பணி ஆய்வாளர் எடுத்துக்கொண்ட ஆய்வின் நோக்கத்தை விவரித்திருப்பார். பின்னர் வினா நிரலைப் பூர்த்தி செய்வதைப் பற்றிய விளக்கம் உண்டு. அதன்பின்னர் தகவலாளி பற்றிய குறிப்பும் வினாநிரலும் அமைந்திருக்கும்.
ஆய்வு செய்தல் (Analysis)
கள ஆய்வில் சேகரித்ததைப் பின்னர் வகைப்படுத்தி ஆய்வு செய்யவேண்டும். ஆயவுக்குப் வகைப்படுத்தலும் ஆய்வு செய்தலும் கள ஆய்வுக்கு பின்னர் செய்யவேண்டியவை தொடர்புடையவையாகும். எனினும் சேகரிப்பும் இம்மூன்றும் கெடுத்தரம். ஒன்றோடொன்று தமிழகத்தில் மேற்கொஅமைந்தால், ஆய்வும் சிறப்பாக ஆமையும் தமிழகத்தில் எளகொண்ட பெரும்பாலான் றுய்வுகள் விளக்க ஆய்வாகவே உள்ளன. டாக்டர் பா. ரா. சுப்பு ஆய்வுகள் ஒப்பாரிக்குப் முறையை (Structural method) தாலாட்டு. பயன்படுத்தி ஆராய்ந்தார். நாட்டுப்புற மரபுகளை ஆராய வரலாற்றை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்கிறார் ரிச்சர்ட் டார்சன் அவர்கள். இத்துறை வளம்பெற சமூக அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் ஆய்வுமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பரிணாம வாதிகள் (Evolutionists) ஊடுருவிப்பரவலாளர்கள் (Diffusionists) அமைப்பியலாளர்கள் (structuralists) போன்றவர்களால் இத்துறை ஆய்வு வளர்ச்சி பெற்றது என்று கூறலாம். நிகழ்த்துக்கலை (performing folk arts) மேலைநாட்டில் ஒரு கோட்பாடாக உருவாகி வருகிறது. அதன் அடிப்படையில் கணியான்கூத்து, தெருக்கூத்து போன்றவற்றை ஆராயவேண்டும். முறையான, அறிவியல் சார்ந்த பல்துறை (Interdisciplinary approach) மேல் நாட்டில் காணப்படும் கீழ்க்கண்ட நாட்டுப் புறவியல் ஆய்வுக்கோட்பாடுகளை நமது ஆய்வுக்கும் பயன்படுத்த வேண்டும். அமெரிக்க நாட்டுப்புறவியல் பேரறிஞர் ரிச்சார்ட் எம். டார்சன் அவர்கள் பன்னிரண்டு கோட்பாடுகளைப் பற்றி விளக்கியுள்ளார்.
0 Comments