1. நீளமான வால் உண்டு குரங்கும் இல்லை அழகான சிறகு உண்டு பறவையும் இல்லை அது என்ன?
பட்டம்
2. கிளையில்லாத மரத்தில் கால் இல்லாதவன் ஏறுவான்
பேன்
3. தாய் பச்சை அப்பா வெள்ளை பிள்ளை சிவப்பு
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு
4. இரவிலே விழித்திருப்பான் பகலிலே தூங்குவான்
ஆந்தை
5. சிவப்பு பைக்குள் சில்லறை சிதறி கிடக்கு!
மிளகாய்வற்றல்
6. வளைந்து நெளிந்து செல்லுவான் பாம்பும் இல்லை நினைத்த இடத்திற்குக் கொண்டு செல்லுவான் மந்திரவாதியும் இல்லை! அது என்ன?
இரயில்
7. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் - அவன் யார்?
கத்தரிக்கோல்
8. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
துடைப்பம்
9. நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் நான் அழுதால் அவன் அழுவவான் அவன் யார்?
கண்ணாடி
10. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
ஊதுபத்தி
11. ஓடுவான் சாடுவான் ஓரத்தில் நிற்பான்
கதவு
12. விரல் இல்லாத கை அது என்ன?
உலக்கை
13. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன். உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
நாற்காலி
14. ஊரெல்லாம் சுத்துவான் வீட்டுக்குள் வரமாட்டான்
செருப்பு
15. கருப்பு சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்
பூட்டு
16. படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடுவாள் விழித்துப் பார்த்தால் மறைந்தே ஓடுவாள் அது என்ன?
கனவு
17. வெள்ளை நிறத்துக்காரன் கறுப்புத் தொப்பிக்காரன் - அது என்ன?
தீக்குச்சி
18. அஞ்சு வீட்டுக்கு ஒரு முற்றம் -அது என்ன?
உள்ளங்கை
19. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான் அது என்ன?
வெங்காயம்
20. தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன?
உப்பு
21. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
சிரிப்பு
22. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
சிலந்தி
23. ஏரியில் இல்லாத நீர் தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
கண்ணீர்
24. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
மெழுகுவர்த்தி
25. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் - அவன் யார்?
சீப்பு
26. தட்டச் சீறும் -அது என்ன?
தீக்குச்சி
27. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை - அது என்ன?
வழுக்கை
28. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான் - அவன் யார்?
பலூன்
29. பகலெல்லாம் வெறுங்காடு இரவெல்லாம் பூங்காடு - அது என்ன?
வானம்
30. மழை காலத்தில் குடை பிடிப்பான் - அவன் யார் ?
காளான்
31. அடிக்காமல் திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் - அவள் யார் ?
வெங்காயம்
32. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்?
பாம்பு
33. எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் - அவள் யார் ?
நிலா
34. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை அது என்ன ?
தீக்குச்சி
35. நீரிலே விளைந்து நீரிலே அழியுது - அது என்ன?
உப்பு
36. அத்துவான காட்டுக்குள்ளே வெள்ளை வேட்டி காயுது அது என்ன?
உப்பு
37. ஆயிரம் தச்சன் கட்டிய மண்டபம் ஒருத்தன் கண்பட்டு உடைஞ்சு போச்சு அது என்ன?
தேன்கூடு
38. ஒரு புட்டியில் இரண்டு எண்ணெய் அது என்ன?
முட்டை
39. கண்டு பூ பூக்கும் காணாமல் காய் காய்க்கும் - அது என்ன?
கடலை
40. குயவன் பண்ணாத பாண்டம் வண்ணான் வெளுக்காத வெள்ளை மழை பெய்யாத தண்ணி அது என்ன?
தேங்காய்
41. ஏழு பேருக்கு ஒரு குடுமி -அது என்ன?
பூண்டு
42. உழைக்க உழைக்க உடம்பெல்லாம் தோன்றும் அது என்ன?
வியர்வை
43. மழைக்காலப் பாட்டுக்காரன், துள்ளிக் குதித்து ஆடிடுவான் கடைசியில் பாம்புக்கு இரையாவான் அவன் யார்?
தவளை
44. ஒரு கிணற்றில் ஒரே தவளை - அது என்ன ?
நாக்கு
45. வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான் - அது என்ன?
பட்டம்
46. கண்ணுக்குத் தெரியாதவன் உயிருக்கு உகந்தவன் அவன் யார் ?
காற்று
47. சுற்றுவது தெரியாது ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான் - அவன் யார் ?
பூமி
48. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் - அது என்ன ?
முட்டை
49. எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான் அவன் யார்?
கோமாளி
50. கிள்ளலாம் கிழிக்கலாம் கிளிக்கூண்டில் அடைக்கலாம் முட்டையிடும் சட்டை கழற்றும் மூணுமாசம் அடைகிடக்கும் நாக்கை நீட்டும் - அது என்ன?
பனங்கிழங்கு
0 Comments